தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி: கனமழை அறிவிப்பால் விடுமுறையா?

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக தஞ்சாவூர், நாகை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் அவ்வப்போது மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களான வடபழனி, ஈக்காட்டுதாங்கல், ராயப்பேட்டை, மயிலாப்பூர், திருவெல்லிக்கேணி, தாம்பரம், தரமணி,
 
தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி: கனமழை அறிவிப்பால் விடுமுறையா?

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

குறிப்பாக தஞ்சாவூர், நாகை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் அவ்வப்போது மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது.

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களான வடபழனி, ஈக்காட்டுதாங்கல், ராயப்பேட்டை, மயிலாப்பூர், திருவெல்லிக்கேணி, தாம்பரம், தரமணி, கிண்டி, மீனம்பாக்கம், மாம்பலம், கோடம்பாக்கம், குரோம்பேட்டை, அசோக் நகர், தண்டையார்பேட்டை, பெரம்பூர், புரசைவாக்கம் போன்ற பகுதிகளில் நேற்றிரவும் இன்று அதிகாலையிலும் மழை பெய்து வருவதால் இன்று சென்னை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web