கமல் தொடர்ந்து கட்சி நடத்துவாரா? கேள்வி எழுப்பும் அதிமுக பத்திரிகை

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்து கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் கூட கமல் போட்டியிடாமல் தனது கட்சி வேட்பாளர்களை மட்டுமே நிறுத்தினார். ஆனால் பாராளுமன்றத் தேர்தலில் கமல் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் அதன்பின் நடைபெற்ற வேலூர் பாராளுமன்ற இடைத்தேர்தல் மற்றும் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளின் இடைத் தேர்தல் ஆகியவற்றிலும் கமல் கட்சி போட்டியிடவில்லை. இந்த நிலையில் தனது கட்சி கிராம சபைக்கு
 

கமல் தொடர்ந்து கட்சி நடத்துவாரா? கேள்வி எழுப்பும் அதிமுக பத்திரிகை

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்து கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் கூட கமல் போட்டியிடாமல் தனது கட்சி வேட்பாளர்களை மட்டுமே நிறுத்தினார். ஆனால் பாராளுமன்றத் தேர்தலில் கமல் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில் அதன்பின் நடைபெற்ற வேலூர் பாராளுமன்ற இடைத்தேர்தல் மற்றும் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளின் இடைத் தேர்தல் ஆகியவற்றிலும் கமல் கட்சி போட்டியிடவில்லை. இந்த நிலையில் தனது கட்சி கிராம சபைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் என்று கூறி ஆங்காங்கே கிராம சபைகளை நடத்திய நிலையில் தற்போது உள்ளாட்சித் தேர்தலையும் கமல் கட்சி புறக்கணித்துள்ளது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது

இதனால் கமல் எதிர்காலத்தில் கட்சியின் தொடர்ந்து நடத்துவாரா என்ற கேள்வியை அதிமுகவின் நமது அம்மா எழுப்பியுள்ளது. இதுகுறித்து அந்த நாளிதழில், ‘கமல்ஹாசன் கட்சி தொடங்கும் போது கிராமசபை நடத்தியதை விமர்சித்துள்ள நமது அம்மா, கமல் ஹாசன், கிராமசபை கூட்டத்தை நடத்துவதாக ஏக பில்டப்போடு அரசியல் கட்சி தொடங்கியதாவும், யதார்த்தத்தை உணராத சினிமா கதாநாயகனாக, முதல் காட்சியில் ஆசைப்பட்டு, மூன்றாவது காட்சியில் கைக்கு அகப்பட்டு விடுகிற கற்பனை நாற்காலியாக முதல்வர் நாற்காலியை அவர் கணக்கு போட்டுவிட்டதாக விமர்சனம் செய்துள்ளது. இதற்கு கமல் தரப்பில் இருந்து என்ன பதில் வரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web