உள்ளாட்சி பதவிகள் ஏலம் எதிரொலி: தேர்தல் ஆணையர் முக்கிய உத்தரவு

உள்ளாட்சி தேர்தலையே கேலிக்கூத்தாக்கும் வகையில் உள்ளாட்சி பதவிகள் லட்சக்கணக்கான ரூபாய்க்கு ஏலம் விட்டு வரும் சம்பவங்கள் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. இத்தனை லட்சம் கொடுத்து பதவிக்கு வருபவர்களிடம் இருந்து என்ன சேவையை மக்கள் எதிர்பார்க்க முடியும் இந்த நிலையில் உள்ளாட்சி பதவிகள் ஏலம் விடுவது குறித்து மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். இதன்படி வேட்புமனுத் தாக்கல், வேட்புமனு பரிசீலனை, வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை என அனைத்துவித தேர்தல் பணிகளையும்
 
உள்ளாட்சி பதவிகள் ஏலம் எதிரொலி: தேர்தல் ஆணையர் முக்கிய உத்தரவு

உள்ளாட்சி தேர்தலையே கேலிக்கூத்தாக்கும் வகையில் உள்ளாட்சி பதவிகள் லட்சக்கணக்கான ரூபாய்க்கு ஏலம் விட்டு வரும் சம்பவங்கள் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. இத்தனை லட்சம் கொடுத்து பதவிக்கு வருபவர்களிடம் இருந்து என்ன சேவையை மக்கள் எதிர்பார்க்க முடியும்

இந்த நிலையில் உள்ளாட்சி பதவிகள் ஏலம் விடுவது குறித்து மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். இதன்படி வேட்புமனுத் தாக்கல், வேட்புமனு பரிசீலனை, வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை என அனைத்துவித தேர்தல் பணிகளையும் எந்தவித புகாருக்கும் இடமளிக்காமல் வெளிப்படைத்தன்மையுடன் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்

மேலும் அரசியல் விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு தேர்தல் பார்வையாளர்கள் செயலாற்ற வேண்டும் என்றும் ஆணையர் பழனிசாமி அறிவுறுத்தினார். தேர்தல் ஆணையரின் அறிவுறுத்தலுக்கு பின்னரும் ஏலம் தொடர்ந்து கொண்டிருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது

From around the web