சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு எப்போது? தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி தகவல்

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 15-ந் தேதி முதல் மார்ச் 30-ந்தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும் என சி.பி.எஸ்.இ. தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் அறிவித்துள்ளார். மேலும் இந்த தேர்வு மொத்தம் 137 பாடப்பிரிவுகளுக்கு நடைபெறவிருப்பதாகவும், அதில், 110 வகையான பாடப்பிரிவுகளுக்கு தேர்வுகள் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையும், 19 பாடப்பிரிவுகளுக்கு காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையும், 8 பாடப்பிரிவுகளுக்கு காலை
 
சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு எப்போது? தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி தகவல்

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 15-ந் தேதி முதல் மார்ச் 30-ந்தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும் என சி.பி.எஸ்.இ. தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் அறிவித்துள்ளார்.

மேலும் இந்த தேர்வு மொத்தம் 137 பாடப்பிரிவுகளுக்கு நடைபெறவிருப்பதாகவும், அதில், 110 வகையான பாடப்பிரிவுகளுக்கு தேர்வுகள் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையும், 19 பாடப்பிரிவுகளுக்கு காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையும், 8 பாடப்பிரிவுகளுக்கு காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும் தேர்வுகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் விடைத்தாள்கள் வழங்கப்படும் எனவும் விடைத்தாளின் முதல் பக்கத்தில் பெயர், பதிவு எண் உள்ளிட்ட தகவல்களை நிரப்புவதற்காக 10.15 மணி வரை 15 நிமிடங்களும்,10.15 மணிக்கு வினாத்தாள்களும் வழங்கப்படும் எனவும் வினாத்தாளை வாசிக்க 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பின்னர் 10.30 மணிக்கு தேர்வு எழுத மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தேர்வு கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

இந்த பொதுத்தேர்வு குறித்த பிற தகவல்களுக்கு www.cbse.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்

From around the web