கனமழை குறித்த அறிவிப்பு: பள்ளிகளுக்கு விடுமுறையா?

வானிலை ஆய்வு மையம் தமிழகத்தின் மழை நிலவரம் குறித்து அவ்வப்போது தகவல் தெரிவித்து வரும் நிலையில் நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என அறிவித்துள்ளது கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியிருப்பதால் இந்த ஐந்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளி கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது கடந்த சில வாரங்களாகவே
 
chennai-rain
கனமழை குறித்த அறிவிப்பு: பள்ளிகளுக்கு விடுமுறையா?

வானிலை ஆய்வு மையம் தமிழகத்தின் மழை நிலவரம் குறித்து அவ்வப்போது தகவல் தெரிவித்து வரும் நிலையில் நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என அறிவித்துள்ளது

கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியிருப்பதால் இந்த ஐந்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளி கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

கடந்த சில வாரங்களாகவே தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் அவ்வப்போது மழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் நாளையும் விடுமுறை கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

இந்த நிலையில் சென்னையில் அதிக மழையை எதிர் பார்க்க முடியாது என்றும் வானம் மேகமூட்டமாக இருந்தாலும் அவ்வப்போது மிதமான மழை மட்டுமே பெய்யும் என்றும் எனவே சென்னையில் உள்ளவர்கள் விடுமுறையை எதிர்பார்க்க முடியாது என்றும் கூறப்படுகிறது. ஆனால் அதே சமயத்தில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் அங்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

From around the web