இரண்டு பல்கலை தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு: மாணவர்கள் அதிர்ச்சி!

தமிழகத்தில் உள்ள கல்லூரிகளுக்கு நாளை முதல் ஜனவரி ஒன்றாம் தேதி வரை திடீரென விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மாணவர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் திடீரென தமிழக அரசு கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவித்துள்ளது கிறிஸ்மஸ், உள்ளாட்சித் தேர்தல் மற்றும் புத்தாண்டு ஆகியவற்றுக்காக இந்த விடுமுறை என அறிவிக்கப்பட்டு இருந்தாலும் மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்கு
 
இரண்டு பல்கலை தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு: மாணவர்கள் அதிர்ச்சி!

தமிழகத்தில் உள்ள கல்லூரிகளுக்கு நாளை முதல் ஜனவரி ஒன்றாம் தேதி வரை திடீரென விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மாணவர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் திடீரென தமிழக அரசு கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவித்துள்ளது

இரண்டு பல்கலை தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு: மாணவர்கள் அதிர்ச்சி!

கிறிஸ்மஸ், உள்ளாட்சித் தேர்தல் மற்றும் புத்தாண்டு ஆகியவற்றுக்காக இந்த விடுமுறை என அறிவிக்கப்பட்டு இருந்தாலும் மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காகவே இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் இம்மாதம் நடத்தவிருந்த தேர்வுகளை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. அதேபோல் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் பதிவாளர் சந்தோஷ் பாபு அவர்கள் தெரிவித்துள்ளார். இதனால் பல்கலைக்கழக தேர்வுக்காக தயாராக இருந்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது

From around the web