எதிர்க்கட்சிகளின் போராட்டம் ஏன்? சரத்குமார் விளக்கம்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்களும், கலவரங்களும் தவறான புரிதலால் நடைபெறுகிறது என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். மேலும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் மட்டுமே குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் அதிகம் நடத்தப்படுவதாகவும், வன்முறையை தூண்டிவிட்டு ஆட்சியை கலைக்கலாம் என்று அங்குள்ள எதிர்கட்சிகள் செயல்படுவதாகவும் சரத்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரண்டு அவைகளிலும் விவாதிக்கப்பட்ட பின்னரே சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், யூகங்களின் அடிப்படையில்
 
எதிர்க்கட்சிகளின் போராட்டம் ஏன்? சரத்குமார் விளக்கம்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்களும், கலவரங்களும் தவறான புரிதலால் நடைபெறுகிறது என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். மேலும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் மட்டுமே குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் அதிகம் நடத்தப்படுவதாகவும், வன்முறையை தூண்டிவிட்டு ஆட்சியை கலைக்கலாம் என்று அங்குள்ள எதிர்கட்சிகள் செயல்படுவதாகவும் சரத்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரண்டு அவைகளிலும் விவாதிக்கப்பட்ட பின்னரே சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், யூகங்களின் அடிப்படையில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதால் கலவரம் வெடித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து மாணவர்களும் தெரிந்துகொண்டு புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அதனை புரிந்து கொண்டால் மாணவர்கள் போராட்டம் நடத்த மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

From around the web