இன்று அந்த பேரழிவு நடந்த நாள்: 55வது ஆண்டுகளாக மனித நடமாட்டமே இல்லாத தமிழகத்தின் பகுதி

கடந்த 1964ஆம் ஆண்டு இதே நாளில்தான் தமிழகத்தின் ஒரு பகுதி அடியோடு அழிந்தது. இந்த பேரழிவு நடந்து 55 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அந்த பகுதியில் மனித நடமாட்டமே இல்லாமல் உள்ளது. அதுதான் ராமேஸ்வரம் அருகில் உள்ள தனுஷ்கோடி தனுஷ்கோடியில் கடந்த 1964ம் ஆண்டு 250 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புயலால் அந்த பகுதி முழுவதுமே ஒட்டுமொத்தமாக அழிந்தது. சுற்றுலா வந்த 40 பேர் உள்பட 200 பேர் இந்த புயலில் பலியாகினர். மனித உயிர்கள்
 
இன்று அந்த பேரழிவு நடந்த நாள்: 55வது ஆண்டுகளாக மனித நடமாட்டமே இல்லாத தமிழகத்தின் பகுதி

கடந்த 1964ஆம் ஆண்டு இதே நாளில்தான் தமிழகத்தின் ஒரு பகுதி அடியோடு அழிந்தது. இந்த பேரழிவு நடந்து 55 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அந்த பகுதியில் மனித நடமாட்டமே இல்லாமல் உள்ளது. அதுதான் ராமேஸ்வரம் அருகில் உள்ள தனுஷ்கோடி
தனுஷ்கோடியில் கடந்த 1964ம் ஆண்டு 250 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புயலால் அந்த பகுதி முழுவதுமே ஒட்டுமொத்தமாக அழிந்தது. சுற்றுலா வந்த 40 பேர் உள்பட 200 பேர் இந்த புயலில் பலியாகினர். மனித உயிர்கள் மட்டுமின்றி கால்நடைகள் உள்பட ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகின

அதுமட்டுமின்றி அங்கிருந்த கட்டிடங்கள் வழிபாட்டுத்தலங்கள் உட்பட ஒட்டுமொத்த அழிவை தனுஷ்கோடி சந்தித்தது. இந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு ராமேஸ்வரத்திலிருந்து அரிச்சல் வரை மட்டுமே சாலை அமைக்கப்பட்டுள்ளது. தனுஷ்கோடி வரை சாலை அமைக்க வேண்டும் என்றும் மீண்டும் தனுஷ்கோடியைப் புதுப்பிக்க வேண்டுமென்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

From around the web