இன்று சூரிய கிரகணம்: எத்தனை மணிக்கு தொடங்கி எத்தனை மணிக்கு முடிகிறது?

சூரியனை முழுமையாக நிலவு மறைத்தால் அது முழு சூரிய கிரகணம் என்றும், சூரியனின் மையப்பகுதியை மட்டும் மறைத்து விளிம்பில் வளையம்போல ஒளி தெரிந்தால் அது வளைய சூரிய கிரகணம் என்றும் அழைக்கப்படும் இன்று நடக்கக்கூடிய சூரிய கிரகணம் தமிழகத்தை பொருத்தவரையில் முழு சூரிய கிரகணமாக கருதப்படுகிறது சூரிய கிரகணம் இன்று காலை 8.06 மணிக்கு தொடங்கி, காலை 11.14 மணி வரை நீடிக்க உள்ளது. தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர்,
 
இன்று சூரிய கிரகணம்: எத்தனை மணிக்கு தொடங்கி எத்தனை மணிக்கு முடிகிறது?

சூரியனை முழுமையாக நிலவு மறைத்தால் அது முழு சூரிய கிரகணம் என்றும், சூரியனின் மையப்பகுதியை மட்டும் மறைத்து விளிம்பில் வளையம்போல ஒளி தெரிந்தால் அது வளைய சூரிய கிரகணம் என்றும் அழைக்கப்படும் இன்று நடக்கக்கூடிய சூரிய கிரகணம் தமிழகத்தை பொருத்தவரையில் முழு சூரிய கிரகணமாக கருதப்படுகிறது

சூரிய கிரகணம் இன்று காலை 8.06 மணிக்கு தொடங்கி, காலை 11.14 மணி வரை நீடிக்க உள்ளது. தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், ஈரோடு, மதுரை ஆகிய 10 மாவட்டங்களில் முழுமையாக சூரிய கிரகணம் தெரியும் என்பதால் இந்த பகுதியில் உள்ள மக்கள் இதனை கண்டு ரசிக்கலாம்.

மேலும் இந்த அரிய சூரிய கிரகணம் தமிழகத்தில் மட்டுமே தெரியும் என்பதால் இந்த சூரிய கிரகணத்தை காண அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வருகை தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இன்று ஏற்படக்கூடிய சூரிய கிரகணத்திற்கு பின்னர் அடுத்த சூரிய கிரகணம் வரும் 2031ம் ஆண்டு மே 16ம் தேதிதான் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இன்று சூரிய கிரகணத்தை பார்க்க தவறுபவர்கள் இன்னும் 19 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

From around the web