பாஜகவின் சர்ச்சை பதிவுக்கு முக ஸ்டாலின் பதிலடி!

இன்று தந்தை பெரியார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் கட்சி பேதமின்றி அனைத்து கட்சி தலைவர்களும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர் இந்த நிலையில் தமிழக பாஜக தனது டுவிட்டர் பக்கத்தில் பெரியார் குறித்து ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்தது. இந்த பதிவிற்கு பாமக, திமுக உள்பட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்ததையடுத்து திடீரென அந்த பதிவை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக வேறொரு பதிவை பாஜக பதிவு செய்தது இந்த
 
பாஜகவின் சர்ச்சை பதிவுக்கு முக ஸ்டாலின் பதிலடி!

இன்று தந்தை பெரியார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் கட்சி பேதமின்றி அனைத்து கட்சி தலைவர்களும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்

இந்த நிலையில் தமிழக பாஜக தனது டுவிட்டர் பக்கத்தில் பெரியார் குறித்து ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்தது. இந்த பதிவிற்கு பாமக, திமுக உள்பட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்ததையடுத்து திடீரென அந்த பதிவை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக வேறொரு பதிவை பாஜக பதிவு செய்தது

இந்த நிலையில் இந்த பதிவு குறித்து முக ஸ்டாலின் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: ’பெரியாரை இழிவுபடுத்தும் கருத்தைப் பதிவு செய்து, எதிர்ப்பு வந்ததும் நீக்கியுள்ளது தமிழக பாஜக. அப்பதிவை போடுவதற்கு முன் யோசித்திருக்கலாமே?

அந்த பயம் இருக்கட்டும்! மரணித்த பிறகும் மருள வைத்துள்ளார் பெரியார்! அதிமுக, இதற்காவது புலியாகப் பாயுமா? இல்லை மண்புழுவாய் பதுங்குமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

From around the web