கனவு நனவாகியது! நிஜமானது ஹீரோ பட கேரக்டர்

ஹீரோ திரைப்படத்தில் இவானா நடித்த மதி என்ற கேரக்டர் உப்புநீரில் ஓடும் இன்ஜினை கண்டு பிடித்தவர் என்பது படம் பார்த்த அனைவருக்கும் தெரிந்ததே. இந்த நிலையில் அரசு பள்ளி மாணவி யோகேஸ்வரி என்பவர் உப்பு நீரில் பைக் எஞ்சினை ஓடவைத்து சாதனை புரிந்துள்ளார். இந்த கண்டுபிடிப்பு குறித்து அவர் கூறியதாவது: உப்பு நீரில் உள்ள ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனில் இருந்து ஹைட்ரஜனை தனியாக பிரித்து எடுத்து அதன்மூலம் பைக் எஞ்சினை இயக்கலாம் என்று நான் கண்டுபிடித்துள்ளேன். இந்த
 
கனவு நனவாகியது! நிஜமானது ஹீரோ பட கேரக்டர்

ஹீரோ திரைப்படத்தில் இவானா நடித்த மதி என்ற கேரக்டர் உப்புநீரில் ஓடும் இன்ஜினை கண்டு பிடித்தவர் என்பது படம் பார்த்த அனைவருக்கும் தெரிந்ததே. இந்த நிலையில் அரசு பள்ளி மாணவி யோகேஸ்வரி என்பவர் உப்பு நீரில் பைக் எஞ்சினை ஓடவைத்து சாதனை புரிந்துள்ளார்.

இந்த கண்டுபிடிப்பு குறித்து அவர் கூறியதாவது: உப்பு நீரில் உள்ள ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனில் இருந்து ஹைட்ரஜனை தனியாக பிரித்து எடுத்து அதன்மூலம் பைக் எஞ்சினை இயக்கலாம் என்று நான் கண்டுபிடித்துள்ளேன். இந்த கண்டுபிடிப்பின் மூலம் ஹைட்ரஜனை நிரப்பினால் 30 கிலோ மீட்டர் முதல் 40 கிலோ மீட்டர் வரை செல்லலாம் என்றும் இந்த உப்பு நீரைப் பயன்படுத்துவதால் சுற்றுப்புறச் சூழலும் எந்தவித பாதிப்பும் இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இந்த கண்டுபிடிப்பு குறித்து ஆய்வு செய்து பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும் என்று யோகேஸ்வரி வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக அரசும் மத்திய அரசும் இது குறித்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்

From around the web