குடியுரிமை சட்டத்தை எதிர்த்து திருமாவளவன் கோலம் போட்டதால் பரபரப்பு

குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து கல்லூரி மாணவிகள் சிலர் கோலம் போட்டு கைதானது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று சென்னை வேளச்சேரி பகுதியில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அவர்கள் இந்த சட்டத்திற்கு எதிரான வாசகங்களுடன் கூடிய கோலத்தை அவரே தன் கையால் போட்டார் இதனை அந்த பகுதி மக்கள் மிகுந்த ஆச்சரியத்தோடு பார்த்தனர். ஒரு சில பெண்கள் அவர் கோலம் போடுவதற்கு உதவி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு நாட்களாக திமுகவினரின் வீடுகளில் இந்த
 
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து திருமாவளவன் கோலம் போட்டதால் பரபரப்பு

குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து கல்லூரி மாணவிகள் சிலர் கோலம் போட்டு கைதானது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று சென்னை வேளச்சேரி பகுதியில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அவர்கள் இந்த சட்டத்திற்கு எதிரான வாசகங்களுடன் கூடிய கோலத்தை அவரே தன் கையால் போட்டார்

இதனை அந்த பகுதி மக்கள் மிகுந்த ஆச்சரியத்தோடு பார்த்தனர். ஒரு சில பெண்கள் அவர் கோலம் போடுவதற்கு உதவி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு நாட்களாக திமுகவினரின் வீடுகளில் இந்த சட்டத்திற்கு எதிரான கோலங்கள் போடப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது ஒரு கட்சியின் தலைவரே வீதிக்கு வந்து கோலம் போட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இது குறித்து திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘நாட்டை பாதுகாக்க வேண்டியது அனைத்து ஜனநாயக சக்திகளின் கடமை என்றும் குடியுரிமை சீர்திருத்த சட்டம் தேச நலனுக்கு எதிரானது என்றும் தெரிவித்தார்

From around the web