அரையாண்டு தேர்வு விடுமுறை மேலும் நீடிக்கின்றதா? பரபரப்பு தகவல்

தமிழகத்தில் அரையாண்டு தேர்வுகள் சமீபத்தில் முடிந்து தற்போது விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஜனவரி 2ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் ஜனவரி மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை இயக்ககம் அறிவித்துள்ளது இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு சீட்டு முறையில் நடைபெற்று உள்ளதால் வாக்குச்சீட்டுகளை எண்ணும் பணி ஒரு நாளுக்கு மேல் நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இதனால்
 
அரையாண்டு தேர்வு விடுமுறை மேலும் நீடிக்கின்றதா? பரபரப்பு தகவல்

தமிழகத்தில் அரையாண்டு தேர்வுகள் சமீபத்தில் முடிந்து தற்போது விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஜனவரி 2ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் ஜனவரி மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை இயக்ககம் அறிவித்துள்ளது

இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு சீட்டு முறையில் நடைபெற்று உள்ளதால் வாக்குச்சீட்டுகளை எண்ணும் பணி ஒரு நாளுக்கு மேல் நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் ஜனவரி 3 ஆம் தேதி தான் முழுமையான வாக்குகள் எண்ணி முடிக்கப்படும் என தெரிவதால் மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது

இந்த நிலையில் 4, 5 ஆகிய தேதிகள் சனி, ஞாயிறு என்பதால் 6ம் தேதி திங்கட்கிழமை தான் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் அரையாண்டு தேர்வு விடுமுறை மேலும் நான்கு நாட்கள் நீடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web