தமிழக பாஜக தலைவர் நடிகை கவுதமியா?

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கபட்ட பிறகு தலைவர் பதவிக்கான காலி இடம் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளது இந்த பதவிக்கு எச் ராஜா, பொன்ராதாகிருஷ்ணன், எல் கணேசன், சிபி ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்பட பலர் பரிசீலனையில் உள்ள நிலையில் தற்போது இந்தப் பட்டியலில் நடிகை கவுதமியும் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை கவுதமி தீவிரமாக அரசியல் பணி செய்து கொண்டிருப்பதாகவும் அவரது அரசியல் ஆர்வத்தை பார்த்த
 

தமிழக பாஜக தலைவர் நடிகை கவுதமியா?

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கபட்ட பிறகு தலைவர் பதவிக்கான காலி இடம் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளது

இந்த பதவிக்கு எச் ராஜா, பொன்ராதாகிருஷ்ணன், எல் கணேசன், சிபி ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்பட பலர் பரிசீலனையில் உள்ள நிலையில் தற்போது இந்தப் பட்டியலில் நடிகை கவுதமியும் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது

சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை கவுதமி தீவிரமாக அரசியல் பணி செய்து கொண்டிருப்பதாகவும் அவரது அரசியல் ஆர்வத்தை பார்த்த பாஜக மேலிடம் அவருக்கு பாஜக தமிழக தலைவர் பதவியைக் கொடுக்க முடிவு செய்திருப்பதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

பாஜகவில் பல சீனியர் தலைவர்கள் இருக்கும் போது புதிதாக சேர்ந்தவருக்கு தலைவர் பதவி கொடுத்தால் அவர்கள் கௌதமிக்கு ஒத்துழைப்பார்களா என்பது கேள்விக்குறியே என்று பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.

From around the web