தமிழகம் முழுவதும் போகிப்பண்டிகை கோலாகலம்: பழையன கழிகின்றன

பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற பழமொழிக்குஏற்ப, பொங்கலுக்கு முந்தைய நாளான இன்று தமிழகமெங்கும் போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் பல இடங்களில் அதிகாலை முதல் போகி காரணமாக புகைமூட்டமாக உள்ளது. ஒருசில இடங்களில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால், வாகன ஓட்டிகள் மெதுவாகவே இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களை ஓட்டிச் சென்றனர். குறிப்பாக போகி பண்டிகையை சிறுவர்கள் பிளாஸ்டிக் மேளம் அடித்தும், பயனற்ற பொருட்களை தீ வைத்தும் கொண்டாடி வருகின்றனர். இந்த புகையால் சுற்றுச்சூழல்
 
தமிழகம் முழுவதும் போகிப்பண்டிகை கோலாகலம்: பழையன கழிகின்றன

பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற பழமொழிக்குஏற்ப, பொங்கலுக்கு முந்தைய நாளான இன்று தமிழகமெங்கும் போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னையில் பல இடங்களில் அதிகாலை முதல் போகி காரணமாக புகைமூட்டமாக உள்ளது. ஒருசில இடங்களில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால், வாகன ஓட்டிகள் மெதுவாகவே இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களை ஓட்டிச் சென்றனர்.

குறிப்பாக போகி பண்டிகையை சிறுவர்கள் பிளாஸ்டிக் மேளம் அடித்தும், பயனற்ற பொருட்களை தீ வைத்தும் கொண்டாடி வருகின்றனர். இந்த புகையால் சுற்றுச்சூழல் கெடும் என ஒருபக்கம் புலம்பல் இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் இந்த கொண்டாட்டம் சிறப்பாகவே நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web