சாலையோரம் நின்ற சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய தமிழக முதல்வர்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சேலம் செல்லும் வழியில் சாலையோரம் நின்று அவருக்கு கை காட்டிய சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய வீடியோ வைரலாகி வருகிறது சேலத்தில் நேற்று கிரிக்கெட் மைதானத்தை தொடங்கி வைப்பதற்காக தமிழக முதல்வர் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் சிலர் முதல்வருக்கு கைகாட்டி வரவேற்பளித்தனர் இதனை பார்த்த முதல்வர் உடனடியாக டிரைவரிடம் காரை நிறுத்தச் சொல்லி அங்கிருந்த சிறுவர்களை அழைத்து அவர்களுக்கு சாக்லேட்டுகளை கொடுத்தார் சிறுவர்கள் மற்றும்
 
சாலையோரம் நின்ற சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய தமிழக முதல்வர்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சேலம் செல்லும் வழியில் சாலையோரம் நின்று அவருக்கு கை காட்டிய சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய வீடியோ வைரலாகி வருகிறது

சேலத்தில் நேற்று கிரிக்கெட் மைதானத்தை தொடங்கி வைப்பதற்காக தமிழக முதல்வர் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் சிலர் முதல்வருக்கு கைகாட்டி வரவேற்பளித்தனர்

இதனை பார்த்த முதல்வர் உடனடியாக டிரைவரிடம் காரை நிறுத்தச் சொல்லி அங்கிருந்த சிறுவர்களை அழைத்து அவர்களுக்கு சாக்லேட்டுகளை கொடுத்தார்

சிறுவர்கள் மற்றும் பெண்கள் மகிழ்ச்சியுடன் அந்த சாக்லேட்டை வாங்கி சென்றனர். மக்கள் மிக எளிதில் அணுகும் வகையில் தமிழக முதல்வர் இருப்பதாகவும் அவர் எங்களை போன்றவர்களை பார்த்து காரை நிறுத்தி சாக்லேட் வழங்கியது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் அந்த பகுதியில் உள்ள மக்கள் தெரிவித்தனர்

From around the web