தங்கம் விலை கிடுகிடு உயர்வு: இப்போது தங்கம் வாங்கலாமா?

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு 752 ரூபாய் அதிகரித்து 33 ஆயிரத்து 328 ரூபாயாக சென்னையில் விற்பனையாகி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இன்றுஇ காலையில், சவரனுக்கு 224 ரூபாய் அதிகரித்த நிலையில், மாலை நிலவரப்படி 558 ரூபாய் ஏற்றம் கண்டது. ஒரு கிராம் 4 ஆயிரத்து 166 ரூபாயக்கு விற்பனையாகி வருகிறது. கடந்த ஒரே வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலை 1600 ரூபாய் விலை ஏறிய நிலையில், இன்று
 
தங்கம் விலை கிடுகிடு உயர்வு: இப்போது தங்கம் வாங்கலாமா?
File photo of an employee of Deutsche Bundesbank testing a gold bar with an ultrasonic appliance during a news conference in Frankfurt…An employee of Deutsche Bundesbank tests a gold bar with an ultrasonic appliance during a news conference in Frankfurt in this January 16, 2013, file photo. Gold slumped anew on April 15, 2013, racking up its worst two-day loss in 30 years, and investors dumped stocks and other commodities after weaker-than-expected Chinese data raised concerns about the global economic outlook. REUTERS/Lisi Niesner/Files (GERMANY – Tags: BUSINESS COMMODITIES)

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு 752 ரூபாய் அதிகரித்து 33 ஆயிரத்து 328 ரூபாயாக சென்னையில் விற்பனையாகி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இன்றுஇ காலையில், சவரனுக்கு 224 ரூபாய் அதிகரித்த நிலையில், மாலை நிலவரப்படி 558 ரூபாய் ஏற்றம் கண்டது. ஒரு கிராம் 4 ஆயிரத்து 166 ரூபாயக்கு விற்பனையாகி வருகிறது.

கடந்த ஒரே வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலை 1600 ரூபாய் விலை ஏறிய நிலையில், இன்று ஒரே நாளில் மட்டும் 752 ரூபாய் உயந்ததால் தங்கம் வாங்கும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் அதே நேரத்தில் தங்கத்தில் லட்சக்கணக்கில் முதலீடு செய்தவர்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.

கோரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்றுமதி -இறக்குமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பங்குச் சந்தை வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த விலையேற்றம் என்றும் இப்போதைக்கு தங்கம் விலை குறையாது என்றாலும் ஒருசில மாதங்களில் ஓரளவு குறைய வாய்ப்பு உள்ளதாகவும் அப்போது தங்கம் வாங்கலாம் என்றும் தங்க சந்தை வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

From around the web