அரசை குறை சொல்லாதீர்கள் பாஸிட்டிவா பேசுங்க

21 நாட்களுக்கு அரசு அறிவித்துள்ளபடி 21 நாட்களுக்கு நீங்கள் உங்களை தனிமைப்படுத்தி கொள்வதே சிறப்பு. முதலில் அரசுக்கு எதிராக சமூக வலைதளத்தில் எழுதுவதையும் அவதூறு பரப்புவதையும் நிறுத்துங்கள். பிரதமரை குறை சொல்லி சில எதிர்க்கட்சிக்காரர்கள் போடும் போஸ்ட்கள் சிலவற்றை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது. இது போல நேரங்களில் ஜாதி மதம் இனம் மொழி, கட்சிகள் எல்லாம் மறந்து பிரதமரின் கரங்களை வலுப்படுத்த வேண்டும். மத்திய அரசு முன்பு கொண்டு வந்த திட்டங்கள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால்
 

21 நாட்களுக்கு அரசு அறிவித்துள்ளபடி 21 நாட்களுக்கு நீங்கள் உங்களை தனிமைப்படுத்தி கொள்வதே சிறப்பு. முதலில் அரசுக்கு எதிராக சமூக வலைதளத்தில் எழுதுவதையும் அவதூறு பரப்புவதையும் நிறுத்துங்கள்.

அரசை குறை சொல்லாதீர்கள் பாஸிட்டிவா பேசுங்க

பிரதமரை குறை சொல்லி சில எதிர்க்கட்சிக்காரர்கள் போடும் போஸ்ட்கள் சிலவற்றை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது. இது போல நேரங்களில் ஜாதி மதம் இனம் மொழி, கட்சிகள் எல்லாம் மறந்து பிரதமரின் கரங்களை வலுப்படுத்த வேண்டும்.

மத்திய அரசு முன்பு கொண்டு வந்த திட்டங்கள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதை எல்லாம் விமர்சனம் செய்து கேலி செய்வதற்கு உகந்த நேரமல்ல இது.

அது போல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எல்லாம் பம்பரமாய் சுழன்று பணி செய்கிறார். அதையும் குறை சொல்லி பதிவிடும் நபர்களும் இருக்கிறார்கள்.

இது இந்த நேரங்களில் அவசியமற்ற பதிவு, நெருக்கடியான நிலைகளில் இது போல செயல்படுவது எழுதுவது பேசுவது நாகரீகமானது அல்ல.

உங்களால் 200 ரூபாய்க்கு நெட் பேக் ரீசார்ஜ் செய்து அவதூறு கருத்துக்களைத்தான் பரப்ப முடியும்.

இது நெருக்கடியான காலக்கட்டம் . வீட்டிற்குள் இருந்து கொண்டு எதையும் எழுதலாம் என அரசுக்கு எதிரான விசயங்களை புறந்தள்ளி வைப்பது நல்லது.

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூட 21 நாள் லாக் டவுனுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். எதையும் பாஸிட்டிவாக பாருங்கள். அரசியல் ரீதியான எதிர்க்கருத்துக்களை வெளியிட இது நேரமல்ல.

அரசும் ஒவ்வொரு துறையும் பம்பரமாய் சுழன்று பணியாற்றுகிறது. அவர்களுடன் கரம் கோர்க்காவிட்டாலும் குறை சொல்லாதீர்கள்.

From around the web