கொரோனா வைரஸ்- ஈரோட்டுக்கு கூடுதல் முக்கியத்துவம்

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட காலத்தில் இருந்து தமிழ்நாட்டில் தொற்று பாதித்த வகையில் ஈரோடுதான் முன்னிலையில் இருந்து வருகிறது. நேற்றுதான் கோவை தொற்று பாதித்த வகையில் முன்னிலைக்கு வந்துள்ளது. இருப்பினும் முதன் முதலில் ஈரோட்டில் இருந்துதான் தாய்லாந்தில் இருந்து இங்கு வந்த தப்ளிக் அமைப்பினர் 4 பேரை விசாரணையின் மூலம் கண்டறிந்து போலீஸ் பிடித்தனர். டெல்லியில் நடைபெற்ற மாநாட் டில் பங்கேற்றுவிட்டு, ஈரோடு வந்த தாய்லாந்து நாட்டி னர் மூவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள்
 

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட காலத்தில் இருந்து தமிழ்நாட்டில் தொற்று பாதித்த வகையில் ஈரோடுதான் முன்னிலையில் இருந்து வருகிறது.

கொரோனா வைரஸ்- ஈரோட்டுக்கு கூடுதல் முக்கியத்துவம்

நேற்றுதான் கோவை தொற்று பாதித்த வகையில் முன்னிலைக்கு வந்துள்ளது. இருப்பினும் முதன் முதலில் ஈரோட்டில் இருந்துதான் தாய்லாந்தில் இருந்து இங்கு வந்த தப்ளிக் அமைப்பினர் 4 பேரை விசாரணையின் மூலம் கண்டறிந்து போலீஸ் பிடித்தனர்.

டெல்லியில் நடைபெற்ற மாநாட் டில் பங்கேற்றுவிட்டு, ஈரோடு வந்த தாய்லாந்து நாட்டி னர் மூவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

மத்திய அரசும் ஈரோடு மாவட்டத்தை அதிகம் பேர் பாதித்ததாக அறிவித்துள்ளது. இங்கு 26 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தாய்லாந்து நாட்டினருடன் பழகிய 117 பேர் பெருந்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

 தற்போது, வெளிநாடு சென்று திரும்பியவர்கள் உட்பட மாவட்டம் முழுவதும் 17,000 வீடுகளைச் சேர்ந்த 60,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர்.

மற்ற மாவட்டங்களை விட இங்குதான் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

From around the web