தூத்துக்குடி -கொரோனாவுக்கு பலியான மூதாட்டி யாரும் பங்கேற்க முடியாத பரிதாபம்

கொரோனா வைரஸ் பரவல் வேகம் சற்று அதிகரித்து கொண்டே வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 24 பேர் இத்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். தூத்துக்குடி ராமசாமிபுரத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதில் அவர் போல்டன்புரத்தில் உள்ள காய்கறிகடையில் பணியாற்றிய பெண்ணுக்கு பரப்பி விட்டதில் அந்த பெண் வயது முதிர்ந்தவராக இருந்ததால் அவர் உயிரிழந்தார். துறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் வேலை செய்யும் அவர் மகன், தூத்துக்குடி ஏவிஎம் மருத்துவமனையில் பணிபுரியும் அவர் மருமகள் உள்ளிட்ட பலருக்கும் கொரோனா
 

கொரோனா வைரஸ் பரவல் வேகம் சற்று அதிகரித்து கொண்டே வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 24 பேர் இத்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

தூத்துக்குடி -கொரோனாவுக்கு பலியான மூதாட்டி யாரும் பங்கேற்க முடியாத பரிதாபம்

தூத்துக்குடி ராமசாமிபுரத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதில் அவர் போல்டன்புரத்தில் உள்ள காய்கறிகடையில் பணியாற்றிய பெண்ணுக்கு பரப்பி விட்டதில் அந்த பெண் வயது முதிர்ந்தவராக இருந்ததால் அவர் உயிரிழந்தார்.

துறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் வேலை செய்யும் அவர் மகன், தூத்துக்குடி ஏவிஎம் மருத்துவமனையில் பணிபுரியும் அவர் மருமகள் உள்ளிட்ட பலருக்கும் கொரோனா தொற்று பரவி விட்டதால் அந்த மருத்துவமனை இழுத்து மூடி சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில் வயது முதிர்ந்த அந்த 71 வயது பெண் உயிரிழந்ததால் அவரது இறுதிச்சடங்கு மிக கடுமையாக இருந்தது.

தூத்துக்குடி துணை எஸ்.பி பிரகாஷ் தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் அந்த பெண் உடல் எடுத்து செல்லப்பட்டு 15 அடி ஆழத்திற்கு குழி வெட்டப்பட்டு, தூத்துக்குடி மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ஜெயசீலன்

மாநகராட்சி சுகாதார குழுவினர் அந்த மூதாட்டியின் உடலை 15 அடி ஆழத்தில் வைத்து புதைத்தனர். தகனக்குழியில் ஒவ்வொரு இரண்டு அடிக்கும் கிருமிநாசினி கலவை தூவப்பட்டு அந்த மூதாட்டியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த பணிகளில் ஈடுபட்ட மருத்துவர்கள், சுகாதாரப்பணியாளர்கள், போலீஸ் உள்ளிட்டோர் முழுஉடல் கவச உடையினை அணிந்து செயல்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கரோனா நோயால் பலியான மூதாட்டிக்கு தூத்துக்குடியில் உறவினர்கள் பலர் இருந்தாலும், கரோனா பயம் காரணமாக அவரின் உடல் தகனத்தில் உறவினர்கள் யாரும் கலந்துகொள்ளதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.

From around the web