ரத்தப்புற்றுநோய் பாதித்த சிறுமியை போலீஸ் ஜீப்பிலேயே மதுரை அனுப்பி வைத்த இராமநாதபுரம் எஸ்.பி

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமை சேர்ந்த இலங்கை பெண் ஒருவரின் 12 வயது மகளுக்கு ரத்தப்புற்று நோய் இருந்து வருகிறது. மாதா மாதம் மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனையில் அந்த சிறுமி தன் பெற்றோருடன் சிகிச்சைக்கு செல்வது வழக்கம் தற்போது போக்குவரத்து இல்லை என்பதால் சிகிச்சைக்கு செல்ல முடியாத சூழ்நிலை. என்ன செய்வதென்று தெரியாமல் மனம் வெதும்பிய தாய், இராமநாதபுரம் மாவட்ட எஸ்.பியை தொடர்பு கொண்டுள்ளார். சில மாதங்கள் முன் பதவியேற்ற இராமநாதபுரம் எஸ்.பி
 

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமை சேர்ந்த இலங்கை பெண் ஒருவரின் 12 வயது மகளுக்கு ரத்தப்புற்று நோய் இருந்து வருகிறது.

ரத்தப்புற்றுநோய் பாதித்த சிறுமியை போலீஸ் ஜீப்பிலேயே மதுரை அனுப்பி வைத்த இராமநாதபுரம் எஸ்.பி

மாதா மாதம் மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனையில் அந்த சிறுமி தன் பெற்றோருடன் சிகிச்சைக்கு செல்வது வழக்கம்

தற்போது போக்குவரத்து இல்லை என்பதால் சிகிச்சைக்கு செல்ல முடியாத சூழ்நிலை. என்ன செய்வதென்று தெரியாமல் மனம் வெதும்பிய தாய், இராமநாதபுரம் மாவட்ட எஸ்.பியை தொடர்பு கொண்டுள்ளார்.

சில மாதங்கள் முன் பதவியேற்ற இராமநாதபுரம் எஸ்.பி பதவியேற்ற சமயத்தில் ஒரு பெர்சனல் மொபைல் நம்பரை கொடுத்து குற்றங்கள் குறித்தும் பிரச்சினைகள் குறித்தும் தெரிவிக்கலாம் என கூறி இருந்தார். அந்த எண்ணை தொடர்பு கொண்ட பெண் தாங்கள் தர்மசங்கடத்தில் இருப்பதையும் சிறுமிக்கு சிகிச்சை கொடுக்கலேன்னா அவள் உடல்நிலை மோசமாகி விடும் என கூற, உடனே அவர் சார்ந்த மண்டபம் காவல்துறையை அழைத்த எஸ்.பி காவல்துறை ஜீப்பிலேயே அங்கிருந்து 150 கிமீ தூரம் மதுரை வரை அழைத்து சென்று அந்த சிறுமிக்கு சிகிச்சை கொடுக்க வைத்துள்ளார்.

நேற்று காலையில் சிகிசைக்காக சென்றவர்கள் சிகிச்சை முடித்துக்கொண்ட பின்னர்

பின்பு காவல்துறை வாகனத்திலேயே மண்டபம் வரை அழைத்து வந்து விடப்பட்டுள்ளார்கள்.

இதற்காக அந்த பெண் இராமநாதபுரம் மாவட்ட எஸ்.பிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

From around the web