கொரோனா இல்லேன்னு சொன்ன ஊருக்கெல்லாம் படை எடுக்கும் கொரோனா

உலகெங்கும் வேகமாக பரவி , பலரது உயிரை குடித்து வரும் கொரோனா தொற்று இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்தியாவில் லாக் டவுன் கடந்த 1 மாதத்திற்கும் மேல் உள்ளதால் பெரிய பாதிப்புகள் இல்லை. இருந்தாலும் இந்தியாவில் பல மாவட்டங்களில் கொரோனாவே இல்லை என்ற தகவல் இருந்து வந்தது. அப்படியாக கட்டுக்கோப்பாக கொரோனாவே இல்லாத மாவட்டமாக இருந்து வந்தது தர்மபுரி,அரியலூர், பெரம்பலூர்,புதுக்கோட்டை, தென்காசி,இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள்தான் சில வாரங்கள் முன் கொரோனா தொற்றே இல்லாத மாவட்டமாக இது இருந்து
 

உலகெங்கும் வேகமாக பரவி , பலரது உயிரை குடித்து வரும் கொரோனா தொற்று இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்தியாவில் லாக் டவுன் கடந்த 1 மாதத்திற்கும் மேல் உள்ளதால் பெரிய பாதிப்புகள் இல்லை. இருந்தாலும் இந்தியாவில் பல மாவட்டங்களில் கொரோனாவே இல்லை என்ற தகவல் இருந்து வந்தது.

கொரோனா இல்லேன்னு சொன்ன ஊருக்கெல்லாம் படை எடுக்கும் கொரோனா

அப்படியாக கட்டுக்கோப்பாக கொரோனாவே இல்லாத மாவட்டமாக இருந்து வந்தது தர்மபுரி,அரியலூர், பெரம்பலூர்,புதுக்கோட்டை, தென்காசி,இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள்தான் சில வாரங்கள் முன் கொரோனா தொற்றே இல்லாத மாவட்டமாக இது இருந்து வந்த நிலையில் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக இங்கும் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்து விட்டது.

எல்லா மாவட்டத்துக்கு பரவினாலும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, புதுக்கோட்டை மாவட்டங்கள் எங்களிடம் வர முடியுமா என கெத்தாக இரண்டு நாட்கள் முன்பு வரை கூட இருந்தனர். இரண்டு நாட்கள் முன் புதுக்கோட்டையில் கொரோனா பரவியது.

இன்று தர்மபுரியிலும் ஒரு டிரைவருக்கு கொரோனா தொற்று பரவி விட்டது இப்போது தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும்தான் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக உள்ளது.

புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மயிலாடுதுறையும் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக கருதப்பட்டாலும், இன்னும் மாவட்டத்திற்குரிய முழுமையான விசயங்கள் அங்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web