கிழிஞ்சது கிருஷ்ணகிரி- வந்தது கொரோனா

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று தலைவிரித்தாடிய நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் கொரோனா தொற்று இல்லாமல் இருந்தது. நேற்று வரை இதை மையப்படுத்தி மீம்ஸ்கள் கூட சமூக வலைதளங்களில் பரவின, கிழிஞ்சது கிருஷ்ணகிரின்னு தமிழ் நாட்டில் ஒரு சொலவடை உண்டு. அப்படிப்பட்ட கிருஷ்ணகிரி மட்டும்தான் கிழியாம இருக்கு, மற்ற ஊர்லாம் கிழிஞ்சிருச்சு என நேற்று மீம்ஸ் பரவிய நிலையில் யார் கண்ணு பட்டுச்சோ கிருஷ்ணகிரிக்கும் கொரோனா தொற்று வந்து விட்டது. இந்த மாவட்டத்தில் இருந்து புட்டபர்த்தி
 

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று தலைவிரித்தாடிய நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் கொரோனா தொற்று இல்லாமல் இருந்தது.

கிழிஞ்சது கிருஷ்ணகிரி- வந்தது கொரோனா

நேற்று வரை இதை மையப்படுத்தி மீம்ஸ்கள் கூட சமூக வலைதளங்களில் பரவின, கிழிஞ்சது கிருஷ்ணகிரின்னு தமிழ் நாட்டில் ஒரு சொலவடை உண்டு. அப்படிப்பட்ட கிருஷ்ணகிரி மட்டும்தான் கிழியாம இருக்கு, மற்ற ஊர்லாம் கிழிஞ்சிருச்சு என நேற்று மீம்ஸ் பரவிய நிலையில் யார் கண்ணு பட்டுச்சோ கிருஷ்ணகிரிக்கும் கொரோனா தொற்று வந்து விட்டது.

இந்த மாவட்டத்தில் இருந்து புட்டபர்த்தி சென்று வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று வந்துள்ளது.

வேப்பனஹள்ளி அருகே நல்லூரைச் சேர்ந்த 67 வயது முதியவருக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டதில் அவருக்கு கொரோனா உறுதியானது.

ஆந்திரா சென்று இரண்டு மாதங்கள் கழித்து அனுமதி இல்லாமல் மாவட்டத்திற்கு வந்ததால் 67 வயது முதியவர் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.

பச்சை மண்டலமாக நாளை மறுநாள் முதல் தளர்வு ஏற்படும் என காத்திருந்த கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு இது பேரிடியாக ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web