நாளை முதல் தேனீர் கடைகள் திறப்பு

மக்களின் அத்தியாவாசிய தேவைகளில் ஒன்றாகி விட்டது தேனீர். கடை வைத்திருப்போர், கடுமையான தொழில் புரிவோர், அலுவலகங்களில் சிஸ்டத்திலேயே உட்கார்ந்திருப்போர் , போட்டோ ஷாப், வீடியோ எடிட்டர், கம்ப்யூட்டர் சார்ந்த அனைத்து தொழிலாளிகளுக்கும் வேலைக்கு நடுவே ஒரு தேனீர் இன்றியமையாத விசயமாக மாறி விட்டது. ஒரு நாளைக்கு சாப்பிடாமல் டீ மட்டும் குடித்துக்கொண்டு வேலையிலேயே கண்ணாக இருந்து வேலையை முடித்து கொடுத்து விட்டு வருவோர் அதிகம். பலருக்கும் டீ சாப்பிடாமல் இருக்க முடியாது. இந்த நிலையில் கடந்த 40
 

மக்களின் அத்தியாவாசிய தேவைகளில் ஒன்றாகி விட்டது தேனீர். கடை வைத்திருப்போர், கடுமையான தொழில் புரிவோர், அலுவலகங்களில் சிஸ்டத்திலேயே உட்கார்ந்திருப்போர் , போட்டோ ஷாப், வீடியோ எடிட்டர், கம்ப்யூட்டர் சார்ந்த அனைத்து தொழிலாளிகளுக்கும் வேலைக்கு நடுவே ஒரு தேனீர் இன்றியமையாத விசயமாக மாறி விட்டது.

நாளை முதல் தேனீர் கடைகள் திறப்பு

ஒரு நாளைக்கு சாப்பிடாமல் டீ மட்டும் குடித்துக்கொண்டு வேலையிலேயே கண்ணாக இருந்து வேலையை முடித்து கொடுத்து விட்டு வருவோர் அதிகம்.

பலருக்கும் டீ சாப்பிடாமல் இருக்க முடியாது. இந்த நிலையில் கடந்த 40 நாட்கள் லாக் டவுனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர் டீ சாப்பிட கூட முடியவில்லை என்ற நிலையில் உள்ளனர்.

பல கிராமங்களில் காலையில் எழுந்த உடன் நகரங்களில் இருப்பது போல் டீ காபி போட்டு கொண்டிருக்க மாட்டார்கள். கிராமங்களில் திறந்திருக்கும் சின்ன டீ கடையில் டீ சாப்பிட்டு விட்டு, வயல், காடு, கரை, கண்மாய் என வேலைக்கு செல்வர். இது போல மக்களுக்கு எல்லாமே சிரமமாய் இருந்து வந்தது லாக் டவுன்.

இந்நிலையில் ஊரடங்கின் அடுத்த தளர்வாய் நாளை முதல் 11.5.2020 முதல் டீக்கடைகளை திறக்க உத்தரவிட்டுள்ளது.

மேலும் தேனீர் கடைகளில் சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். தினமும் 5 முறை கிருமிநாசினி தெளித்து, கடையை சுத்தமாகவும் சுகாதரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். இதை முறையாக கடைபிடிக்க தவறும் தேனீர் கடைகள் உடனடியாக மூடப்படும் என அரசு அறிவித்துள்ளது.

From around the web