மதுரையில் குறைந்து வரும் கொரோனா -குணமடைபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

தமிழ்நாட்டின் கொரோனாவுக்கு முதல் பலி மதுரையில்தான் நடந்தது. மதுரையில் அண்ணா நகரை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வந்து மூச்சுத்திணறலால் அவர் பலியானார். இதற்கு பிறகு சென்னை, கோவை, போன்ற நகரங்களை தாண்டி மதுரையிலும் தொற்று அதிகரித்தது. தற்போது தினமும் ஒரு சில தொற்றுகளே ஏற்படுகிறது. பெருமளவில் தொற்று இல்லாத நிலையில் மதுரை மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 18 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 147 பேரில் இதுவரை 101 பேர்
 

தமிழ்நாட்டின் கொரோனாவுக்கு முதல் பலி மதுரையில்தான் நடந்தது. மதுரையில் அண்ணா நகரை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வந்து மூச்சுத்திணறலால் அவர் பலியானார்.

மதுரையில் குறைந்து வரும் கொரோனா -குணமடைபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

இதற்கு பிறகு சென்னை, கோவை, போன்ற நகரங்களை தாண்டி மதுரையிலும் தொற்று அதிகரித்தது.

தற்போது தினமும் ஒரு சில தொற்றுகளே ஏற்படுகிறது. பெருமளவில் தொற்று இல்லாத நிலையில் மதுரை மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 18 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 147 பேரில் இதுவரை 101 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 44 ஆக குறைந்துள்ளது. இதனிடையே, மதுரை மாவட்டம் பழங்காநத்தம், புது அக்ரஹாரம் பகுதிகளில் கடந்த 20 நாட்களாக புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை. தொடர்ந்து அப்பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டன. 

From around the web