பிஞ்சிலேயே பழுத்த சிறுவன் -பெற்றோர்களுக்கு டிஐஜியின் எச்சரிக்கை

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 3-ம் வகுப்பு படித்துவந்த 9 வயதான சிறுமி நேற்று முன்தினம் மாலை ஒரு தோட்டத்தில் ரத்தக் காயங்களுடன் கிடந்தார். அந்த சிறுமியை மீட்டு மருத்துவமனை கொண்டு சென்றும் தலையில் பலத்த காயமடைந்த அந்த சிறுமி இறந்தார். இது குறித்த போலீஸ் விசாரணையில் இதை செய்தது ஒரு 14 வயது சிறுவன் என தெரிந்தபோது போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவ இடத்தில் கிடந்த ரத்தக் கறை படிந்த பேன்ட், சட்டை ஆகியவற்றை கைப்பற்றி
 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 3-ம் வகுப்பு படித்துவந்த 9 வயதான சிறுமி நேற்று முன்தினம் மாலை ஒரு தோட்டத்தில் ரத்தக் காயங்களுடன் கிடந்தார். 

பிஞ்சிலேயே பழுத்த சிறுவன் -பெற்றோர்களுக்கு டிஐஜியின் எச்சரிக்கை

அந்த சிறுமியை மீட்டு மருத்துவமனை கொண்டு சென்றும் தலையில் பலத்த காயமடைந்த அந்த சிறுமி இறந்தார்.

இது குறித்த போலீஸ் விசாரணையில் இதை செய்தது ஒரு 14 வயது சிறுவன் என தெரிந்தபோது போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

சம்பவ இடத்தில் கிடந்த ரத்தக் கறை படிந்த பேன்ட், சட்டை ஆகியவற்றை கைப்பற்றி போலீஸார் விசாரித்தபோது, அந்த ஆடைகள் சிறுமியின் உறவுக் காரரின் 14 வயது மகனுடையது எனத் தெரியவந்தது. அந்தச் சிறுவனைப் பிடித்து விசாரித்த போலீஸார், அந்தச் சிறுவன் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றபோது, உடன்படாததால் பெற்றோரிடம் கூறிவிட்டால் பிரச்சினையாகிவிடும் என பயந்து தலையில் கல்லால் அடித்து கொலை செய்துவிட்டதாக தெரி வித்தனர்.

இச்சம்பவம் திருச்சி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இது குறித்து கூறியுள்ள திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கண்காணிக்கும்படியும் சிறுவர்களிடம் செல்ஃபோன்களை வாங்கி கொடுக்க வேண்டாமென்றும் அப்படி செல்ஃபோனை வாங்கினால் அதில் என்ன பார்க்கிறார்கள் என கண்காணிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

, யூ டியூப் சேனல்களில் பார்க்கக் கூடாத காட்சிகளைப் பார்ப்பதால்தான் இதுபோன்ற குற்றச் செயல்கள் நடக்கின்றன. எனவே, குழந் தைகள் செல்போனைப் பயன் படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும்” என்றார்.

From around the web