ஓவர் நைட்டில் ஓவர் டிரெண்டிங் ஆன சீமான்

நாம் தமிழர் கட்சியின் சீமான் அவர்களின் பேச்சு ஆரம்ப காலத்தில் உணர்வுப்பூர்வமாய் இருந்தது. அதனால் அவர் தம்பிகள் என அதிகமான நபர்கள் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர். சீமானின் பேச்சை கைதட்டி ரசித்தனர். உண்மையில் சீமானின் பல பேச்சுக்களில் நியாயம் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை ஆனால் அவர் அடிக்கடி ஒன்று சொல்வதும் பின்பு அடுத்த வருடம் மாற்றி சொல்வதும் தொடர்கதையாகி வருகிறது. கடவுள் மறுப்பு கொள்கை, பெரியார் போன்ற விசயங்களில் இவரது நிலைப்பாடு ஆரம்பத்தில் இருந்தது ஒன்று
 

நாம் தமிழர் கட்சியின் சீமான் அவர்களின் பேச்சு ஆரம்ப காலத்தில் உணர்வுப்பூர்வமாய் இருந்தது. அதனால் அவர் தம்பிகள் என அதிகமான நபர்கள் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர்.

சீமானின் பேச்சை கைதட்டி ரசித்தனர். உண்மையில் சீமானின் பல பேச்சுக்களில் நியாயம் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை ஆனால் அவர் அடிக்கடி ஒன்று சொல்வதும் பின்பு அடுத்த வருடம் மாற்றி சொல்வதும் தொடர்கதையாகி வருகிறது.

கடவுள் மறுப்பு கொள்கை, பெரியார் போன்ற விசயங்களில் இவரது நிலைப்பாடு ஆரம்பத்தில் இருந்தது ஒன்று இறுதியில் பேசியது ஒன்று இது எல்லோருக்கும் தெரிந்த விசயம்.

சில வருடங்களாக விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனுடன் அவர் இருந்த அனுபவங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். அப்படியாக அவர் அவருடன் உணவருந்தும் சம்பவங்களை தொடர்ந்து சொல்லி வருகிறார்.

ஆனால் ஒவ்வொரு முறை சீமான் பிரபாகரனுடன் உணவருந்திய நிகழ்வுகளை பேசும்போது அது நம்பும்படியாக இல்லை என்பதே சமூக வலைதள நபர்களின் கருத்தாக உள்ளது.

ஓவர் நைட்டில் ஓவர் டிரெண்டிங் ஆன சீமான்

பிரபாகரன் ஒருவர் சாப்பிடுவதை கூட ஒரு நபரை வைத்து இதை சாப்பிட்டார், இதை சாப்பிடவில்லை என ஆளை வைத்து குறிப்பெடுத்து கொள்வதாக கடந்த வருடம் கூறி இருந்தார்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் விடுதலை புலிகளின் பொட்டு அம்மானுடன் உணவருந்திய அனுபவங்களை பகிர்ந்து இருந்தார் இட்லிக்குள்ள கறி இருக்கும் என பேசி இருந்தார்.

இதுவும் சமூக வலைதளங்களில் கடந்த இரண்டு நாட்களாக டாப் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

இட்லிக்குள்ள கறி என பலதரப்பட்ட மீம்ஸ்கள் கலக்குகிறது. சிலர் சீமானின் பேச்சு உணர்வுப்பூர்வமாய் முன்பு இருந்தது இப்போது உணவுப்பூர்வமாய் மட்டுமே இருக்கிறது என அவரை கலாய்த்து வருகின்றனர்.

From around the web