திருடிசென்ற பைக்கை மனசாட்சியுடன் பார்சலில் திருப்பி அனுப்பிய நபர்

கோவை அருகே சூலுரில் ஒர்க்ஷாப் நடத்தி வருபவர் சுரேஷ். இவர் அப்பகுதியில் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். இவர் தனது டூவீலரை சில நாட்கள் முன் தனது கடை அருகே நிறுத்தி சென்றார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட பேரில் போலீசார் விசாரித்து வந்தனர். அப்பகுதி சிசி டிவி கேமிராக்களையும் ஆய்வு செய்தனர். இந்நிலையில் டூவீலரை திருடி சென்றது அந்த பகுதியில் வேலை பார்த்து வந்த திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த பிரசாந்த் என தெரிந்தது. இந்நிலையில் பிரபல பார்சல்
 

கோவை அருகே சூலுரில் ஒர்க்‌ஷாப் நடத்தி வருபவர் சுரேஷ். இவர் அப்பகுதியில் ஒர்க்‌ஷாப் நடத்தி வருகிறார். இவர் தனது டூவீலரை சில நாட்கள் முன் தனது கடை அருகே நிறுத்தி சென்றார்.

இது தொடர்பாக அளிக்கப்பட்ட பேரில் போலீசார் விசாரித்து வந்தனர். அப்பகுதி சிசி டிவி கேமிராக்களையும் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் டூவீலரை திருடி சென்றது அந்த பகுதியில் வேலை பார்த்து வந்த திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த பிரசாந்த் என தெரிந்தது.

இந்நிலையில் பிரபல பார்சல் சர்வீஸ் நிறுவனத்தினர் உங்களுக்கு ஒரு பார்சல் வந்திருக்கு என கூறி பார்சலில் வந்த டூவிலரை ஒப்படைத்தனர்.

திருடுபோன தனது இருசக்கர வாகனத்தை, திருடிச் சென்ற அந்த நபர் பார்சல் மூலமாக திருப்பி அனுப்பி யிருந்தது தெரிந்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த சுரேஷ், கட்டணத்தை செலுத்திவிட்டு, வாகனத்தை எடுத்துச் சென்றார்.

ஊரடங்கு நேரத்தில் பொது போக்குவரத்து இல்லாததால், சுரேஷின் இருசக்கர வாகனத்தை திருடி, அதன் மூலம் சொந்த ஊருக்கு பிரசாந்த் சென்றிருக் கலாம் எனவும், போலீஸார் விசாரிப்பதை அறிந்து, ஆர்.சி.புத்தகத்தில் உள்ள முகவரிக்கு பார்சல் நிறுவனம் மூல மாக வாகனத்தை திருப்பி அனுப்பி இருக்கலாம் எனவும் தெரியவருகிறது.

From around the web