கடனுக்கு அவகாசம் கொடுத்துவிட்டு வட்டி கட்ட சொல்வதா? கமல்ஹாசன் ஆவேசம்

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே இந்த நிலையில் வங்கிகள் தாங்கள் கொடுத்த கடன்களுக்கு கடன் தவணை அவகாசம் கொடுத்துள்ளது என்பதும் ஆனால் அதே நேரத்தில் அந்த அவசாக காலத்திற்கு கடன் தொகைக்கு வட்டி கட்டவேண்டும் என்று கூறியுள்ளது இதுகுறித்து டுவிட்டரில் பதிவு செய்துள்ள கமலஹாசன் ’கடன் தொகைக்கு கால அவகாசம் வழங்கி விட்டு அதற்கு வட்டி கேட்பதா? என்று ஆவேசமாக கூறியுள்ளார்.
 
கடனுக்கு அவகாசம் கொடுத்துவிட்டு வட்டி கட்ட சொல்வதா? கமல்ஹாசன் ஆவேசம்

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் வங்கிகள் தாங்கள் கொடுத்த கடன்களுக்கு கடன் தவணை அவகாசம் கொடுத்துள்ளது என்பதும் ஆனால் அதே நேரத்தில் அந்த அவசாக காலத்திற்கு கடன் தொகைக்கு வட்டி கட்டவேண்டும் என்று கூறியுள்ளது

இதுகுறித்து டுவிட்டரில் பதிவு செய்துள்ள கமலஹாசன் ’கடன் தொகைக்கு கால அவகாசம் வழங்கி விட்டு அதற்கு வட்டி கேட்பதா? என்று ஆவேசமாக கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் டுவிட்டரில் கூறியதாவது:

புகைப்படக்கலைஞர்கள், டாக்ஸி / வேன் ஓட்டுநர் என 20 லட்சம் பேர் வருமானமின்றி, வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். கடன் கட்ட அவகாசம் தந்து விட்டு, அதற்கும் வட்டி போட்டு சுமையேற்றப்படுகிறது. மன அழுத்தத்தில் இருக்கும் அவர்களை காக்க எம் தொழிலாளரணி முனைந்துள்ளது. அரசின் உதவியும் அவசியம்

கமலஹாசனின் இந்த டுவீட் குறித்து மக்கள் நீதி மையத்தின் தொழிலாளர்கள் அணி இதுகுறித்து கூறியதாவது: ‘தேசத்தின் முதுகெலும்பாக திகழும் தொழிலாளர்கள் நலன் காத்திட நம் மக்கள் நீதி மய்யத்தின் தொழிலாளர் அணி புறப்பட்டு விட்டது எங்கெல்லாம் அவர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறதோ அங்கே தொழிலாளர்களின் உரிமைக் குரலாக ஓங்கி ஒலிப்போம். கமல்ஹாசன் அவர்களது வழிகாட்டுதலில் அவர்களின் உரிமைகளை மீட்டெடுப்போம்’

From around the web