சாலையில் சென்று கொண்டிருந்த பைக் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு: காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்

காஞ்சிபுரத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த பைக் ஒன்று திடீரெனத் தீப்பிடித்து எரிந்ததால் அந்த பகுதியில் இருந்த மக்கள் மற்றும் பைக்கை ஓட்டியவர் அலறியடித்து ஓட்டம் பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் குஜராத்தி சத்திரத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது பைக்கில் வேகமாக சென்று கொண்டிருந்தார். அப்போது. அந்த பைக்கில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டு இருந்ததாக தெரிகிறது. இதனால் அந்த நபர் ஓட்டி சென்ற பைக் திடீரென தீ பிடித்து எரிந்தது. இதனால் பைக்கை அப்படியே போட்டுவிட்டு
 

சாலையில் சென்று கொண்டிருந்த பைக் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு: காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்

காஞ்சிபுரத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த பைக் ஒன்று திடீரெனத் தீப்பிடித்து எரிந்ததால் அந்த பகுதியில் இருந்த மக்கள் மற்றும் பைக்கை ஓட்டியவர் அலறியடித்து ஓட்டம் பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் குஜராத்தி சத்திரத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது பைக்கில் வேகமாக சென்று கொண்டிருந்தார். அப்போது. அந்த பைக்கில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டு இருந்ததாக தெரிகிறது.

இதனால் அந்த நபர் ஓட்டி சென்ற பைக் திடீரென தீ பிடித்து எரிந்தது. இதனால் பைக்கை அப்படியே போட்டுவிட்டு அந்த நபர் ஓட்டம் பிடித்தார். இதில் இருசக்கர வாகனம் முழுவதும் எரிந்து சேதமானது. இந்த சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தனர்.

இருப்பினும் சில இளைஞர்கள் பைக் தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் தீ மளமளவென எரிந்ததால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் இருசக்கர வாகனம் முழுவதும் எரிந்து சேதமானது.

இந்தசம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீஸார் தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பைக்கை ஓட்டிய வாலிபரிடமும் விசாரணை செய்தனர்.

From around the web