தலைமை செயலாளர் சண்முகம் பதவிக்காலம் நீட்டிப்பு!

தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் ஜூலை மாத இறுதியுடன் ஓய்வு பெறவிருந்த நிலையில், அவரது பதவிக்காலத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் தலைமை செயலாளராக 2019ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி சண்முகம் ஐஏஎஸ் அவர்கள் பதவியேற்று கொண்டார். அவரது பதவிக்காலம் ஜூலை மாத இறுதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அவரது பதவிக்காலம் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை அவர் தலைமை செயலாளராக நீடிப்பார் எனவும் தமிழக
 

தலைமை செயலாளர் சண்முகம் பதவிக்காலம் நீட்டிப்பு!

தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் ஜூலை மாத இறுதியுடன் ஓய்வு பெறவிருந்த நிலையில், அவரது பதவிக்காலத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் தலைமை செயலாளராக 2019ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி சண்முகம் ஐஏஎஸ் அவர்கள் பதவியேற்று கொண்டார். அவரது பதவிக்காலம் ஜூலை மாத இறுதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அவரது பதவிக்காலம் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை அவர் தலைமை செயலாளராக நீடிப்பார் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த சண்முகம் கடந்த1985 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். முடித்தார். அதன்பின் 1985ஆம் ஆண்டு தஞ்சை மாவட்ட உதவி ஆட்சியராகவும், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராகவும், பல்வேறு முக்கிய துறைகளிலும் பொறுப்பு வகித்துதார். கடந்த 2010ஆம் ஆண்டு முதல் நிதித்துறை செயலாளராக இருந்த சண்முகம் 2019ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி தமிழக அரசின் 46ஆவது தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

From around the web