முதல்வர் ஸ்டாலின் 46வது திருமணநாள்: தலைவர்கள் வாழ்த்து!

 
stain durga

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று தனது 46வது திருமண நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் 

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கடந்த 1975ஆம் ஆண்டு துர்கா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் ஆகியோர்களின் தலைமையில் நடந்த இந்த திருமணத்துக்கு ஏராளமானோர் வருகை தந்து வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலின் ஆகியோர் இன்று தங்களது 46 வது திருமண நாளைக் கொண்டாடி வருகின்றனர். அவர்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

முதல் முறையாக முதல்வர் பதவி ஏற்றுள்ள ஸ்டாலின் அவர்கள் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் இன்றைய திருமண நாளை தமிழக மக்களும் இணைந்து கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் திருமண நாளை அடுத்து அண்டை மாநில முதல்வர்களும் மத்திய அமைச்சர்களும் மாநில அமைச்சர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

From around the web