கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டார் முதல்வர் பழனிசாமி!

 

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை 400 க்கும் குறைவான கொரோனா பாதிப்பு தினமும் இருந்த நிலையில் நேற்று 600க்கும் அதிகமான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தடுப்பு ஊசியை அனைவரும் போட்டு வருகின்றனர். பிரதமர் முதல் பல அரசியல் தலைவர்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. மேலும் நேற்று முன்தினம் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

cm palanisamy vaccine

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் உள்ள கொரோனா மையத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதனையடுத்து அமைச்சர்களும் அடுத்தடுத்து தடுப்பூசி போட்டுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web