முதல்வர் ஈபிஎஸ், கட்சி தலைவர் ஓபிஎஸ், மகனுக்கு மந்திரி பதவி

 

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருப்பதை அடுத்து, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சார்பில் இரண்டு நிபந்தனைகள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது 

முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க தான் தயார் என்றும் அதற்கு பதிலாக அதிமுக பொதுச் செயலாளர் பதவி தர வேண்டும் என்றும் மத்திய மந்திரியாக தனது மகனை  மத்திய மந்திரியாக்க முதல்வர் ஈபிஎஸ் பிரதமரிடம் பரிந்துரை செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார் 

இந்த நிபந்தனையை முதல்வர் ஈபிஎஸ் ஏற்றுக்கொண்டதாகவும் இதனையடுத்து நாளைய முதல்வர் பதவி குறித்த அறிவிப்பில் ஈபிஎஸ் பெயர்தான் வரும் என்றும் கூறப்படுகிறது. மேலும் கட்சியை வழிநடத்த பதினோரு பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைக்கப்பட உள்ளதாகவும் இதில் 6 பேர் ஈபிஎஸ் ஆதரவாளர்களும் ஐந்து பேர் ஓபிஎஸ் ஆதரவாளர்களும் இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது

வரும் தேர்தலில் அதிமுக கூட்டணியின் வெற்றி எந்த அளவுக்கு உள்ளது என்பது தெரியாத நிலையில் அதற்குள் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் முதல்வர் வேட்பாளருக்காக போட்டி போடுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

From around the web