நேரில் வரும் முதல்வர்: குவியும் வாழ்த்துக்கள்!

 
stalin

தமிழக முதலமைச்சராக முக ஸ்டாலின் கடந்த மாதம் பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பதும் குறிப்பாக கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிராக அவர் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக தற்போது பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்தவுடன் மக்களை சந்திக்க நேரில் வருகிறேன் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்திருப்பது மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நோய் தொற்று இல்லாத தமிழகத்தை உருவாக்கிவிட்டு உங்கள் அன்பு முகம் காண நேரில் வருவேன் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்

தஞ்சை, திருச்சி, சேலம் மாவட்டங்களில் நான் மேற்கொள்ள இருப்பவை முழுவதும் அரசு சார்ந்த பணி என்றும் எனவே என்னை நேரில் சந்திக்க ஆர்வம் காட்டவேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மேட்டூர் அணையை திறப்பதற்காக வரும் 12ஆம் தேதி தஞ்சை திருச்சி சேலம் பகுதியில் சுற்றுப்பயணம் செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இதுகுறித்து அவர் உடன்பிறப்புகளுக்கு எழுதிய மடல் ஒன்றில் கடமையை நிறைவேற்ற வேண்டி இருப்பதால் கண்ணியமிக்க செயல்பாடு என்பது நீங்கள் கட்டுப்பாடு காப்பதுதான். பேரிடர் காலத்தில் நாம் கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் விரைவில் மாறும் நோய் தொற்று இல்லாத தமிழகத்தை உருவாக்கிவிட்டு உங்கள் அன்பு முகம் காண நேரில் வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

From around the web