ஜன 4-ம் தேதி முதல் சென்னை - மதுரை தேஜஸ் சிறப்பு ரயில் ரத்து

 

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை முதல் மதுரை வரை தேஜஸ் சிறப்பு ரயில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது தெரிந்ததே. சென்னையில் இருந்து கிளம்பும் இந்த தேஜஸ் ரயில் திருச்சி மற்றும் கொடைரோடு ஆகிய இரண்டு ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் தேஜஸ் ரயிலில் கட்டணம் அதிகமாக இருக்கும் காரணத்தினால் தற்போது பொது மக்களிடையே வரவேற்பு இல்லாமல் இருந்தது. இதனை அடுத்து சென்னை மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் ரயில் ஜனவரி 4 முதல் ரத்து என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது 

tejas train 1

பயணிகளிடையே போதிய வரவேற்பு இல்லாததால் தேஜஸ் ரயில் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரயிலில் சென்னையிலிருந்து மதுரை செல்ல விமான கட்டணத்தை விட அதிக கட்டணம் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web