காலையில் ஒரு என்கவுண்டர், மதியம் ஒரு கைது: சென்னையில் ரவுடிகள் ராஜ்யம் ஒழிக்கப்படுகிறதா?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ரவுடிகள் சுற்றிவளைக்கப்பட்டு என்கவுண்டர் செய்யப்படுவதும் கைது செய்யப்படுவதுமான சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன கடந்த 2 நாட்களுக்கு முன்னால் தூத்துக்குடியில் துரைமுத்து என்ற ரவுடியின் சுற்றிவளைக்கப்பட்டு என்கவுண்டர் செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே அதேபோல் இன்று காலை சென்னை அயனாவரத்தில் ரவுடி சங்கர் என்பவர் என்கவுண்டர் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சற்று முன் சென்னை வேளச்சேரியில் சேர்ந்த பிரபல ரவுடி திருவேங்கடம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருமண விழா
 
காலையில் ஒரு என்கவுண்டர், மதியம் ஒரு கைது: சென்னையில் ரவுடிகள் ராஜ்யம் ஒழிக்கப்படுகிறதா?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ரவுடிகள் சுற்றிவளைக்கப்பட்டு என்கவுண்டர் செய்யப்படுவதும் கைது செய்யப்படுவதுமான சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன

கடந்த 2 நாட்களுக்கு முன்னால் தூத்துக்குடியில் துரைமுத்து என்ற ரவுடியின் சுற்றிவளைக்கப்பட்டு என்கவுண்டர் செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே

அதேபோல் இன்று காலை சென்னை அயனாவரத்தில் ரவுடி சங்கர் என்பவர் என்கவுண்டர் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சற்று முன் சென்னை வேளச்சேரியில் சேர்ந்த பிரபல ரவுடி திருவேங்கடம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக ரவுடி திருவேங்கடம் வந்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அந்த திருமண மண்டபத்தை சுற்றி வளைத்த போலீசார் அந்த திருமண விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த ரவுடி திருவேங்கடத்தை கைது செய்தனர்.

இன்று காலை ரவுடி சங்கர் போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில் மற்றொரு ரவுடி திருவேங்கடம் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web