சென்னை மெட்ரோ ரயில் இயங்கும் நேரத்தில் மாற்றம்: முதல் ரயில் எத்தனை மணிக்கு?

 
metro

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன என்பதும் அவற்றில் ஒன்று சென்னை மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே

சென்னையில் மெட்ரோ ரயில் கடந்த சில நாட்களாக காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படுகிறது என்பதும் இரு மார்க்கங்களிலும் 10 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் தற்போது சென்னை மெட்ரோ ரயில் இயங்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. திங்கள் முதல் சனி வரை சென்னை மெட்ரோ ரயில் காலை 5:30 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கும் என்றும் ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் மட்டும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கும் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது இதனால் மெட்ரோ ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 

ஆனால் அதே நேரத்தில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் குறிப்பாக மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடித்து பயணம் செய்ய வேண்டும் என்றும் மெட்ரோ ரயில் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

From around the web