தமிழக வானிலை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

 
rain

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக தான் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் வெப்பச்சலனம் காரணமாக சென்னை உள்பட பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் தமிழக வானிலை குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது 

தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் வெப்ப சலனத்தால் மட்டும் ஓரிரு இடங்களில் மிதமான மழை வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் ஜூன் 12 13ல் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் ஒருசில உள் மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும் என்றும் மழை இருக்காது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை தோன்றி இருப்பதால் வளைகுடா பகுதியில் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் என்றும் இதனால் தமிழகத்திற்கு பெரிய அளவில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

From around the web