6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்த சென்னை வானிலை ஆய்வு மையம்! 

 

சென்னை வானிலை ஆய்வு மையம் 6 மாவட்டங்களுக்கு கனமழை குறித்த எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் உள்ள வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு 

மேலும் வட மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை வாய்ப்பு என்றும்  சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், திருவள்ளூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை ஜூன் 28ஆம் தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய  மாவட்டங்களிலும், ஜூன் 29 மற்றும் 30ஆம் தேதி உள் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உண்டு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

From around the web