கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

 
rain

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இன்றும் நாளையும் அதாவது ஜூன் 8 மற்றும் 9 ஆகிய இரண்டு நாட்களில் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரி, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் ஜூன் 10 முதல் 12 ஆம் தேதி வரை தமிழகம் புதுவை ஆகிய இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 

சென்னையை பொறுத்தவரை இன்னும் இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் மட்டுமே காணப்படும் என்றும் ஒரு சில பகுதிகளில் மட்டும் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று சென்னையில் பல இடங்களில் நல்ல மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web