சென்னை ஐஐடி மாணவர் திடீர் தற்கொலை: எரிந்த நிலையில் பிணம் கண்டெடுப்பு!

 
chennai IIT

சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவர் ஒருவர் எரிந்த நிலையில் பிணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது 

சென்னை ஐஐடியில் எலக்ட்ரிக்கல் ஆராய்ச்சி மாணவர் கேரளாவைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன். இவர் திடீரென நேற்று தனக்கு தானே தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்ததும் சென்னை கோட்டூர்புரம் காவல்துறையினர் ஐஐடி வளாகம் சென்று மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதல்கட்ட விசாரணையில் இந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர் 

சென்னை ஐஐடி வளாகத்தில் ஏற்கனவே ஒரு சில மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ளது ஐஐடி மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் நேற்று உதவி பேராசிரியர் விபின் என்பவர் ஐஐடி வளாகத்தில் ஜாதி பாகுபாடு இருப்பதால் தன்னால் பணிபுரிய முடியவில்லை என்று தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விபின் ராஜினாமா செய்த அதே நாளில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web