கொரோனா சிகிச்சை மையமாக மாறும் சென்னை ஹோட்டல்கள்

 
கொரோனா சிகிச்சை மையமாக மாறும் சென்னை ஹோட்டல்கள்

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. தமிழகத்தில் தினமும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும், சென்னையில் சுமார் ஐந்தாயிரம் பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதால் சென்னையில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன 

மேலும் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை காலியாக இல்லை என்பதால் பல மணி நேரம் காத்திருந்து கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்படும் நிலை உள்ளது. இந்த நிலையில் தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் ஓட்டல்கள் சிகிச்சை மையம் ஆக மாற்றலாம் என்றும் அதற்கு எந்தவித அனுமதியும் தேவையில்லை என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது 

bed

இதனை அடுத்து தற்போது ஹோட்டல்கள் இயங்காமல் மூடப்பட்டு இருக்கும் நிலையில் கொரோனா சிகிச்சை மையம் ஆக மாறினால் வருமானம் வரும் என்பதால் ஹோட்டல் உரிமையாளர்கள் அதற்கு ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிகிறது

From around the web