குடிநீர் ஆலைகள் போராட்டக்காரர்களுக்கு சென்னை நீதிமன்றம் எச்சரிக்கை

கேன் குடிநீர் ஆலைகள் உரிமையாளர்கள் கடந்த 4 நாட்களாக வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருவதால் சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் குடிநீருக்கு தவித்து வருகின்றனர் கேன் குடிநீரை குடித்து பழகி விட்ட சென்னை மக்களின் திண்டாட்டத்தை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை எனலாம் இந்த நிலையில் இது குறித்த வழக்கு ஒன்றில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் கேன் குடிநீர் ஆலைகள் போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது போராட்டம் மூலம் நெருக்கடி கொடுக்கலாம் என நினைப்பது தவறு
 
குடிநீர் ஆலைகள் போராட்டக்காரர்களுக்கு சென்னை நீதிமன்றம் எச்சரிக்கை

கேன் குடிநீர் ஆலைகள் உரிமையாளர்கள் கடந்த 4 நாட்களாக வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருவதால் சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் குடிநீருக்கு தவித்து வருகின்றனர்

கேன் குடிநீரை குடித்து பழகி விட்ட சென்னை மக்களின் திண்டாட்டத்தை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை எனலாம்

இந்த நிலையில் இது குறித்த வழக்கு ஒன்றில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் கேன் குடிநீர் ஆலைகள் போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது

போராட்டம் மூலம் நெருக்கடி கொடுக்கலாம் என நினைப்பது தவறு என்றும் நிலத்தடியில் இருந்து நீர் எடுக்கும் அளவுக்கு ஏற்ப ஏன் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் கேள்வி எழுப்பியுள்ளது

இயற்கை வளமான தண்ணீரை இலவசமாக எடுக்க அனுமதிப்பது ஆச்சரியமாக இருப்பதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்த நிலையில் மூடப்பட்ட ஆலைகளை தற்காலிகமாக இயங்க அனுமதிப்பது தொடர்பாக உத்தரவு நாளை பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நீதிமன்றத்தில் தமிழக அரசு சமர்ப்பித்த அறிக்கையில் இதுவரை மொத்தம் 552 குடிநீர் ஆலைகள் மூடப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web