இமயம் தொட்ட தங்கம்: திடீரென உயர்ந்த தங்கம் விலையால் பரபரப்பு!

 
gold

இந்தியாவில் கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்து கொண்டே வருவதை பார்த்து வருகிறோம். குறிப்பாக சென்னையில் கடந்த சில நாட்களில் தங்கம் விலை உயர்ந்ததன் காரணமாக தங்கம் வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர் 

இந்த நிலையில் இன்று தங்கம் விலை திடீரென கிராம் ஒன்றுக்கு 33 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் சவரன் ஒன்றுக்கு 264 ரூபாய் உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தங்கம் வாங்க முடிவு செய்தவர்கள் கலக்கத்தில் உள்ளனர். சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த தகவலை தற்போது பார்ப்போம்

சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை ரூ.4640 எனவும், ஒரு சவரன் விலை ரூ.37,120 எனவும் விற்பனையாகி வருகிறது. அதேபோல் 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.4999 எனவும், 8 கிராம் விலை ரூ.39,992 எனவும் விற்பனையாகி வருகிறது. 

அதேபோல் வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.77.10 எனவும், கிலோ ஒன்றின் விலை ரூ.77,100 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

From around the web