இயற்கை பேரழிவுகளால் சென்னை அழியும் ஆபத்தா- விளக்குகிறார் ஆவியுலக ஆராய்ச்சியாளர் விக்கிரவாண்டி ரவிச்சந்திரன்
பொதுவாகவே இந்த உலகம் அழியும் ஆபத்து இருப்பதாக விஞ்ஞானிகள் பலமுறை எச்சரித்து வருகின்றனர். மனிதர்கள் எதையும் கேட்பதாக இல்லை. எல்லா இயற்கை சீரழிவுகளையும் மனிதன் செய்து வருகிறான்.
பெருநகரங்களை பொறுத்தவரை சொல்லவே தேவை இல்லை அத்தனை இயற்கை அழிப்பையும் செய்து வருகிறான் மனிதன். சென்னை போன்ற நகரங்கள் எல்லாம் சிறு மழைக்கே தாக்கு பிடிக்காமல் சென்னை நகரம் தகுந்த உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படாமல் திணறி வருகிறது. கடந்த 2015ல் வந்த மழை வெள்ளத்தை நினைத்தால் சென்னை வாசிகள் கிலியாகி விடுவார்கள். நீண்ட நாட்களாகவே விஞ்ஞானிகளாலும், ஜோதிடர்களாலும், சாமியார்களாலும், புவியியல் வல்லுனர்களாலும் சென்னைக்கு ஆபத்து ஆபத்து என்றே செய்திகள் வந்து கொண்டிருக்கிறன்றன.
பிரபல ஆவியுலக ஆராய்ச்சியாளர் திரு விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் அவர்களும் சென்னைக்கு உண்மையிலேயே ஆபத்து உள்ளதா என இந்த வீடியோ மூலம் விளக்குகிறார்.