ஜூன் 15ல் 10 ஆம் வகுப்பு தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது: நீதிமன்ற உத்தரவால் பரபரப்பு

ஜூன் 15ல் 10 ஆம் வகுப்பு தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது என்றும் இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதன் மூலம் 9லட்சம் மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்த அனுமதிக்க முடியாது என்றும், கொரோனா தொற்று பரவல் குறைந்த பின் தேர்வு நடத்தலாம் என்றும், ஜூலை 2வது வாரத்தில் தேர்வு நடத்தலாமா என்பதை பிற்பகல் 2.30 மணிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள்
 
ஜூன் 15ல் 10 ஆம் வகுப்பு தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது: நீதிமன்ற உத்தரவால் பரபரப்பு

ஜூன் 15ல் 10 ஆம் வகுப்பு தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது என்றும் இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதன் மூலம் 9லட்சம் மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்த அனுமதிக்க முடியாது என்றும், கொரோனா தொற்று பரவல் குறைந்த பின் தேர்வு நடத்தலாம் என்றும், ஜூலை 2வது வாரத்தில் தேர்வு நடத்தலாமா என்பதை பிற்பகல் 2.30 மணிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்து வரும் நிலையில் திடீரென சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த அடுக்கடுக்கான கேள்விகளால் தமிழக அரசு அதிர்ந்துள்ளது.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று மதியம் 2.30 மணிக்குள் தமிழக அரசு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த இறுதி முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனேகமாக இந்த தேர்வு ரத்தாகவே அதிக வாய்ப்பு இருப்பதாக தமிழக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

From around the web