மதுரையில் ரத யாத்திரை: அனுமதி வழங்க நீதிமன்றம் உத்தரவு

 

மதுரையில் ரத யாத்திரையை நடத்த அனுமதி வழங்குமாறு மாநகர காவல்துறை ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவதை அடுத்து அந்த ராமர் கோவிலுக்கு நிதி உதவி பெறுவதற்காக மதுரையில் ரதயாத்திரை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இந்த ரத யாத்திரைக்கு மதுரை காவல்துறையினர் அனுமதி மறுத்தனர் 

இதனை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது

அப்போது மதுரையில் ரதயாத்திரை நடத்த அனுமதி வழங்குமாறு மாநகர காவல்துறை ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் மதுரையில் உள்ள 100 வார்டுகளிலும் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்

அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலுக்காக பொருள் உதவி பெறுவதற்காக நடத்தப்படும் இந்த ரத யாத்திரைக்கு அனுமதி கிடைத்துள்ளதை அடுத்து ரத யாத்திரை குழுவினர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

From around the web