வங்கி செயல்படும் நேரத்தில் மாற்றம்: இன்று முதல் எத்தனை மணி நேரம் இயங்கும்?

 
lakshmi vilas bank

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனை அடுத்து வங்கிகள் நேரம் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வங்கிகள் இன்று முதல் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை இயங்கும் என்றும் 2 மணி முதல் 4 மணி வரை அலுவல் பணிகள் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் 2 மணி வரை நான்கு மணி நேரம் வங்கி பரிவர்த்தனை நடைபெறும் என்பதால் வாடிக்கையாளர்கள் அந்த நேரத்தில் வங்கிகளை பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது

மேலும் நிர்வாக அலுவலகங்கள் வழக்கம் போல் 5 மணி வரை செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. வங்கி கிளைகளில் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள் மட்டும்தான் பணிபுரிவார்கள் என்றும் வங்கி ஊழியர்கள் மாற்று முறையில் பணிபுரிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வங்கிகளில் செயல்படுத்தப்படும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் வழக்கம்போல் இயங்கும் என்றும் குறிப்பாக என்இஎஃப்டி, ஆர்டிஜிஎஸ், ஐஎம்பிஎஸ் ஆகியவை இயங்கும் என்றும் அதே போல் ஏடிஎம்மில் பணம் நிரப்பும் பணி போன்றவையும் வழக்கம்போல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web