கன்னியாகுமரியில் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

 
rain

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு தோன்றியுள்ளதை அடுத்து கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை மற்றும் புயல் காற்று வீச வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 

வங்கக்கடலில் நாளை அதாவது ஜூன் 11 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக கன்னியாகுமரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் இடியுடன் கூடிய கன மழைக்கும் வாய்ப்பு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

அதேபோல் மன்னார் வளைகுடா, அந்தமான் கடல் பகுதிகளில் மிக வேகமான காற்று வீசும் என்பதால் அந்த பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது 
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் கன மழை பெய்து வெள்ளக் காடாக இருந்தது என்பதும் அங்கு உள்ள அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு காரணமாக மீண்டும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web